20-ந்திகதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

282 0

201701170038103132_chance-of-rain-in-Tamil-Nadu-meteorological-information_SECVPFதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் கேள்விக்குறியாக போய்விட்டது. இந்த நிலையில் வருகிற 20-ந்தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அதிகமாக பெய்யுமா? என்றோ, எத்தனை நாள் நீடிக்கும் என்றோ இப்போது கூற இயலாது. 17-ந்தேதிதான் (இன்று) ஓரளவுக்கு கூறமுடியும்.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அந்தமான் அருகே புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை விரைவில் உருவாக வாய்ப்பு உள்ளது. அதன்காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.