ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்டைய சேவைகள் ஒரு இயக்கத்திற்கு மக்கள் பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மாலை புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.
புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தார்.
புத்தளம் தில்லையடியில் அமைக்கப்பட்டுள்ள தாய்-சேய் நிலையத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்த ரவூப் ஹக்கீம், புத்தளம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெற்ற புத்தளத்தில் அமைக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய வர்த்தக நிலையம் மற்றும் பல அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து புத்தளம் கொழும்பு முகத் திடல் அபிவிருத்தி தொடர்பான கண்காணிப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிராந்திய காரியாலயத் திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார்.
இங்கு உரை நிகழ்த்திய அமைச்சர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ{டைய சேவைகள் தனிநபர்களுடைய இலக்குகளை அடைகிற ஒரு விடயமாக இல்லாமல் ஒரு இயக்கத்திற்கு பலத்தை சேர்க்கிற மக்கள் சேவையாக மாற வேண்டும் என தெரிவித்தார்