வவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

397 0

vavuniya busவவுனியா ஏ-9 கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேரூந்து நிலையத்தை, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று திறந்து வைத்தார்.

மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளுர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்கின்ற பேரூந்துக்களுக்கான பிரதான தரிப்பிடமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பேரூந்துத் தரிப்பிடத்தில் 13 பேரூந்துகள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும், 21 பேரூந்துகள் உள்ளுர் சேவையிலும் ஈடுபடக்கூடிய வகையில் தரிக்கப்படவுள்ளன.

குறித்த பேரூந்து நிலையம், ஏ-9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், நாளாந்தம் 100 பேரூந்துகள் வந்து செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அபயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா, பிரதிப் போக்குவரத்து அமைச்சர் அபேக்க அபேயசிங்க, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், கே.கே.மஸ்தான், வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரே, வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான கமலநாதன், ஜி.ரி.லிங்கநாதன், ம.ஜெயதிலக, அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, தனியார் பேரூந்து சஙகத் தலைவர் மற்றும் அதன் உரிமையாளர்கள், இலங்கை போக்குவரத்து சபையினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.