எந்தவொரு கட்சியையும் சாராது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சியில் இணைவதற்கோ அல்லது வேறு எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர்வதற்கு விரும்பம் இல்லை என அவர் இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தேசிய பிரச்சினையின் முன்னிலையில் தாக்கம் செலுத்தக் கூடிய விரிவான தேசிய அமைப்பொன்றை கட்டியெழுப்புவதற்கு தாம் பங்களிப்பை வழங்கவுள்ளதாக ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.