பெய்ருட் நகரில் இருந்து லண்டனுக்கு சென்ற விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது பயணிகளுக்குள் ஏற்பட்ட அடிதடி காரணமாக இஸ்தான்புல் நகரில் அவசரமாக தரையிறங்கிய நேர்ந்தது.
மத்திய கிழக்கு விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் கடந்த புதன்கிழமை ஜெர்மனியில் உள்ள பெய்ருட் நகரில் இருந்து பிரிட்டன் தலைநகரான லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது.
நடுவானில் சுமார் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்த இரு வயதான பயணி, மற்றொரு பயணியையும் அவரது மனைவியையும் திட்டியபடி, சரமாரியாக தாக்கினார்.
இதை தடுக்க வந்த பணிப்பெண்ணை இழுத்து கீழே தள்ளிய அந்நபர், கீழே விழுந்த பெண்ணுக்கு உதவ வந்த மற்றொரு பணிப்பெண்ணின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார்.
இதை கண்டு ஆவேசம் அடைந்த ஒரு இளைஞர் தகராறு செய்தவரை சமாதானப்படுத்தி, அழைத்து சென்று அவரது இருக்கையில் அமர வைத்தார். இதற்கிடையே, துருக்கி நாட்டு வான் எல்லையை நெருங்கிவிட்ட அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.
உடனடியாக அனுமதி கிடைத்ததையடுத்து, அந்த விமானம் இஸ்தான்புல்லில் தரையிறங்கியது. தகராறு செய்த பயணியையும், அவரது மனைவியையும் அங்கே இறக்கிவிட்ட பின்னர் அவ்விமானம் லண்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது.
இந்த காட்சிகளை எல்லாம் தனது செல்போனில் படம்பிடித்த ஒரு பயணி, கடந்த வியாழக்கிழமை அந்த வீடியோவை யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=P052M7PfE1s