ஐ.நா பிரேரணையில் பிரேரிக்கப்பட்ட விடயங்கள் அவ்வாறே நிறைவேற்றப்பட வேண்டுமென்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டில், எவ்வித மாற்றமும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்தெரிவித்தார். யுத்தக் குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் அவசியமில்லையென எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதாக, சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ள கருத்திற்கு மறுப்புத் தெரிவித்த சம்பந்தன், ஐ.நா சபையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு என்றார். அத்தோடு, ஜனாதிபதியின் கருத்தானது, தனது ஆட்சியின் கீழ் ஏற்படக்கூடிய அழுத்தங்களை எதிர்கொள்வதற்கான தந்திரோபமாயமாக இருக்குமாக இருந்தால், அதனைச் சரியான முறையில் சரியானவர்களுடன் கலந்துரையாடி சரிசெய்து கொள்ளவேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.