2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் 25 வயதுடைய ஹிங்குல பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபர் ஹம்பாந்தோட்டையில் சஹ்ரான் ஹாசிம் நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், பயங்கரவாதிகளுக்கு உதவியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.