மாடர்னா தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு ஆய்வு நடத்தப்பட்டது.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 2-வது டோசை செலுத்தி 5 மாதங்கள் ஆன நிலையில் அது தொற்று பாதிப்பை தடுப்பதில் 87 சதவீத செயல்திறனை கொண்டுள்ளது.
நோயின் தீவிரத்துக்கு எதிராக 95 சதவீத பாதுகாப்பை கொண்டுள்ளது.
மரணத்துக்கு எதிராக 98 சதவீத செயல்திறனை பெற்றிருக்கிறது.
மாடர்னா நிறுவனத்தின் நிதியளிப்பில், இந்த தடுப்பூசியை செலுத்திய 3 லட்சத்து 52 ஆயிரத்து 878 பேருடன், தடுப்பூசி போடாத அதே எண்ணிக்கையிலான நபர்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் முடிவுகள் ‘லேன்செட்’ மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.