பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் அந்த பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு அவசியமான அதிகாரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு பணிப்பாளர் தனது சேவையை உரிய முறையில் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது வரை விசாரணை மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து ஆவணங்கள் தொடர்பில் நன்கு அறிந்து வைத்துள்ளார்.
புதிய பணிப்பாளர் வருகைத்தந்து ஆவணங்கள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்வதற்கு காலம் தேவைப்படும் எனவும் ஏனைய சில அதிகாரிகள் வெற்றிடங்களின் காரணமாகவும் நிதி மோசடி விசாரணை பிரிவின் நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்படக் கூடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.