சலாவ ஆயுத களஞ்சிய வெடிப்பு சம்பவத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன்பொருட்டு சுமார் 1,329 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி, 90 சதவீதமானவர்களுக்கு 1,041 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கி முடிவுறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.மியனவல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். சேத விபரங்களை கணக்கிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே ஏஞ்சியவர்களுக்கு நட்டஈடு வழங்க முடியாமல் போனதாக அவர் தெரிவித்தார்.
அவற்றை எதிர்வரும் மாதயிறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத களஞ்சிய வெடிப்பினால் பாதிக்கப்பட்ட சில வர்த்தக நிலையங்களையும், குடிமனைகளையும் மீளமைக்கும் பணிகளும் இதன்போது இடம்பெற்று வருகின்றன.