அரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

337 0

14730746286Nalinda-Jayatissa-Lஅரச சொத்துக்களை அவதூறாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் டி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச அரசியல் பழிவாங்கலுக்காக கைது செய்யப்பட்டார் என கூறும் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தறை, நுபே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே நலின் டி ஜயதிஸ்ஸ இந்த கருத்தை வௌியிட்டார்.

முன்னாள் அமைச்சர் விமல் விரவங்ச ´நாட்டுக்காக சேவையாற்றிய பின்னர் சிறைசென்றாலும் பரவாயில்லை´ என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நாடளாவிய ரீதியாக ஒட்டப்பட்டுள்ளன.

என்றபோதும், அவர் நாட்டுக்காக உண்மையாக சேவையாற்றவில்லை என்றும் தமது குடும்பத்திற்காகவே கடமையாற்றிவிட்டு சிறைச்சாலைக்கு சென்றிருப்பதாக ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும். ஊடகங்களுக்கு முன்பாக விரவங்சவுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் உறவினர்கள், அவர் ஆளும் கட்சியில் இருந்த போது அரச சொத்துக்களை அனுபவித்து சுகபோகமாக வாழ்ந்தவர்கள்தான்.

உண்மையாக அரச காணிகள், வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியவர்கள் ஆளும் கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி என்று பாரபட்சம் பாராது தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.