திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பூமிநாதன் (வயது 51), ஆடு திருடர்களால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மணிகண்டன் என்பவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் கொலை வழக்கில் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.