ராஜபக்ஷர்களின் ஆட்சியிலேயே பெண்கள் துஷ்பிரயோகம் அதிகம்’

276 0

அன்று தொடக்கம் இன்று நாட்டில் ஆட்சியமைத்த அரசாங்கங்களுள், விசேடமாக ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தில் தான் பெண்களுக்கு எதிராக அதிக துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, விசேடமாக உள ரீதியான, வாய்மொழி மூலமான, உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் என, ஏதோ ஒருவகையில் கொடுமைகள் இடம்பெற்று வருகின்றன என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்த தெரிவித்த அவர், “இதற்கான உதாரணங்கள் எம்மிடம் உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என எம்மிடம் பல உதாரணங்கள் உள்ளன.“நகர சபைகளில் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதனுடன் தொடர்புடைய பிரதான நபர், பொதுஜன பெரமுனவின் உறுப்பினராகவே இருப்பார். ஆனால், நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும் விடயம், எமது ஆட்சியில் தான் முதற்தடவையாக அதிகமான பெண்கள் அரசியலுக்கு வரும் 25 சதவீத ஒதுக்கீட்டை பெண்களுக்கு வழங்கினோம்.“ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாவின் வெற்றிக்காக அதிகம் வீதிக்கு இறங்கியவர்கள் பெண்கள். ஆனால், இன்று அந்த பெண்களின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.“ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் ஏமாறுகின்றனர்.

ஆனால், ஆண் என்பவன் கடுமையான தொனியில் கதைக்க வேண்டும். பெண்களைக் கவனத்தில் எடுக்காமல் இருக்க வேண்டும் என, எமது பெண்கள் நினைக்கின்றனர். இது ஆசிய நாடுகளில் ஆண்கள் தொடர்பில் பெண்களின் சிந்தனை இவ்வாறு உள்ளது.

“வயிற்றையும் மார்பையும் வெளியே தள்ளிக்கொண்டு இருந்தால் அவர் சிறந்த ஆண் மகன் என எமது பெரும்பான்மையான பெண்கள் நினைக்கின்றனர். அவ்வாறு சிந்தித்துத் தான் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர்.இவர்கள் ஆட்சிக்கு வந்தால், அதிக துஷ்பிரயோகங்கள் இடம்பெறும் என தெரிந்தும் இவர்களை ஆட்சிக்குக் கொண்டுவந்தனர்.

பெண்களுக்கு எதிராக எவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டாலும் சட்டநடவடிக்கை
எடுக்கமாட்டார்கள் எனத் தெரியும். எப்போதும் பெண்களை மதிக்காதவர்களையே இவர்கள்
உறுப்பினர்களாகத் தெரிவு செய்வர் என தெரிந்தும் பெண்கள் அவர்களுக்கே வாக்களிக்கின்றனர்“ என்றார்.