வரவு -செலவு திட்டத்தின் நேற்றைய (26) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரிசி, உரம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில்,
அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.
தமிழர்களும், முஸ்லிம்களும் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தாலும், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான அநீதிகளை தடுக்க அவர்களால் முடியவில்லை என்றார்.
தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனத்தெரிவித்த அவர், “ஒரே நாடு, ஒரே சட்டம்” எனும் ஜனாதிபதி செயலணியின்செயற்பாடுகள் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினைகளை உருவாக்குமென
எச்சரித்தார்.