“மறக்க முடியுமா எம் மறவர்களை” இன்று எம் மாவீரர் நாள் – கார்த்திகை 27

566 0

எம் இன விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த எம் மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழர் வரலாற்றிலிருந்து என்றும் எக்கணமும் அழிக்க முடியாத நாள் எம் மாவீரர் நாளாகும்.

எம் தமிழின விடுதலைக்காக சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தில்,சிங்கள பேரினவாதிகளுடன் போரிட்டு இன்னுயிர் நீர்த்த எம் போராளிகளை நினைவு கூறும் நாளே மாவீரர் நாள் என அழைக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் வீர போராட்டத்தில் உயிர் நீர்த்த முதல் போராளி லெப்டினன் சங்கர் என அழைக்கப்படும் சத்தியநாதன் வீரச்சாவடைந்த நவம்பர் 27ஆம் திகதி, எம் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இன்று தமிழர் தாயகம் மற்றும் புலம்பேர் நாடுகளில் எம் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வுகளும் அஞ்சலி கூட்டங்களும் இடம்பெற உள்ளன.

சிறிலங்காவில் 2009 யுத்தத்துக்கு பின் மாவீரர்களை நினைவு கூர சிறிலங்கா அரசாங்கம் தடைகளை விதித்தாலும் தடைகளை மீறி வடக்கிலும் கிழக்கில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இம் முறையும் சிறிலங்கா அரசு, நீதி மன்றங்கள் மூலம் பலதடைகளை போட்டுள்ளது. அத்தோடு தாயகம் முழுவதும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் குவிக்கப்பட்டு சோதனைகளும் இடம்பெற்று வருகிறன.

இம்முறையும் தடைகளை மீறி எம் மாவீரர்களை மாலை 6.05 மணியளவில் ஈகை சுடர் ஏற்றி நினைவு கூறப்படுமென வடக்குகிழக்கு தமிழர் அமைப்புக்கள் அறிக்கை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.