இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை கட்டியெழுப்பி அனைவரும் பயம்,சந்தேகம் கொண்டும் வாழும் நிலையை இல்லாமல்செய்யவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஞாயிறன்று மாலை (ஜுலை 10, 2016) மட்டக்களப்பு வெபர் விளையாட்டுக் கட்டிடத் தொகுதியை திறந்து வைத்து உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் புராதன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெபர் மைதானம் சுமார் 201 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
கிழக்கு மாகாணம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.அரசாங்கம் என்ற வகையில் கிழக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையினை மேம்படுத்தவும் அதிகளவு நிதியை செலவிட்டுவருகின்றோம்.
நீண்டகால யுத்தம் காரணமாக வடகிழக்கு மக்கள் பெரும் இழப்புகளையும் கஸ்டங்களையும் எதிர்கொண்டவர்கள்.யுத்த கொரூர அனுபவங்களை நன்கு அனுபவித்தவர்கள்.இந்த நாட்டில் யுத்தம் ஏன் ஏற்பட்டது என்று உங்களைப்போன்று இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.அவ்வாறான யுத்தம் மீண்டும் இந்த நாட்டில் ஏற்படக்கூடாது என்பது தொடர்பாக மிகவும் கவனமான முறையில் எமது அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.
மேல் மாகாணத்தின் அபிவிருத்தி போன்று கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியும் வரவேண்டும்.அபிவிருத்தி என்று பேசும்போது வடகிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியின் குறைபாடுகளை நாங்கள் ஆராயவேண்டிய தேவையுள்ளது.இப்பகுதியில் அபிவிருத்தியின் பின்னடைவுக்கு இப்பகுதியில் உள்ள காலநிலையும் ஒரு காரணமா என்ற சந்தேகமும் நிலவுகின்றது.
2016ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் 173 நாடுகளில் சமாதானத்திற்காக மும்முரமாக செயற்படும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தினைக்கொண்டுள்ளது.இலங்கையில் உள்நாட்டில் சமாதானத்தினை ஏற்படுத்துவதற்காக பல நாடுகள் உதவி வருகின்றன.அவற்றில் மூன்று நாடுகள் முக்கியத்துமானதாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தஆண்டினை விட இந்த ஆண்டு மிகவும் முன்னிலையில் உள்ளதாக அந்த சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன.
இந்த நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்ப மக்களாக வாழவேண்டும்.இந்த நாட்டில் பல இனங்களை சேர்ந்த இலட்சக்கணான மாணவர்கள் உள்ளனர்.அவர்கள் அனைவரையும் எனது சொந்த பிள்ளைகளாகவே நான் கருதுகின்றேன்.
இந்த நாட்டில் பல இனங்களையும் பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.அவர்கள் அனைவரும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் இந்த நாட்டில் வாழவேண்டும் என்பதே மிகமுக்கியமாகும்.அரசாங்கம் என்ற வகையில் அனைத்து இனத்திற்குள்ளும் சகோதாரத்தினை உருவாக்குவதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றோம்.
சமாதானத்தினை முன்னேற்றுவதற்கும் பொருளாதாரத்தினை முன்னேற்றுவதற்கும் அனைவருக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளது.இனமதபேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படவேண்டும்.நாங்கள் இந்த நாட்டில் சமமாக மதிக்கப்படுகின்றோம் என்ற எண்ணம் அனைவரது மனங்களில் ஏற்படும் நிலையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஊடாக தேசிய பொருளாதாரத்தில் எவ்வாறான பங்களிப்பினை வழங்கமுடியும் என்பதை நாங்கள் ஆராயவேண்டும்.மட்டக்களப்பு மாவட்டம் விவசாயம்,கால்நடை வளர்ப்பு,மீன்பிடியில் முன்னேற்றகரமான நிலையில் உள்ளது.தென்மாகாணத்தினை விட உல்லாசப்பயணத்துறையினை கிழக்கு மாகாணத்தில் மேம்படுத்தமுடியும்.
இந்த நாட்டில் பெரிய அபிவிருத்திகள் தொடர்பில் பூச்சாண்டி காட்டும் பலர் உள்ளார்கள்.கடந்த 20வருடகாலத்தில் எமது நாட்டில் இருந்த தேசிய கைத்தொழில்கள் அதளபாதாலத்துக்கு சென்றுவிட்டன.சர்வதேசத்திற்கு செல்லக்கூடிய உள்நாட்டு உற்பத்திகள் இன்று அதளபாதாலத்தில் வீழ்ந்துள்ளன.இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதியில் பெரும் தாக்கத்தினை இது ஏற்படுத்தியுள்ளது.வெளிநாட்டு பெருமதிகள் வீழ்ச்சியடைந்துள்ளன.உள்நாட்டு ஏற்மதி பூச்சிய நிலையில் உள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்நூறுக்கு மேற்பட்ட நடுத்தர கைத்தொழில் மத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.பாதைகள் பாலங்கள் பலவற்றை நிர்மாணித்த போதிலும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசிய உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.பாதைகளும் மின்சாரங்களும் தேசிய நலனைக்கொண்டிராமல் தனிப்பட்ட நலன்களுக்காகவே போடப்பட்டன.
இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் உள்ளன.அவை ஒன்பது மாகாணங்களாக உள்ளன.இவை அனைத்தும் ஒரே அளவாக சமமமாகவே முன்னேறவேண்டும்.ஒவ்வொருவரையும் தனிப்பட்ட ரீதியில் நாங்கள் பார்க்கமுடியாது.அனைத்து பகுதிகளுக்கும் ஒரேமாதிரியான அபிவிருத்திகளையே நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நாங்கள் வழங்கிய திட்டங்கள் தற்போது செயற்பட்டுவருகின்றன.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.சர்வதேச ரீதியில் இருந்து அதிகளவான உதவிகள் வடகிழக்கினை நோக்கியே வருகின்றன.யுத்தத்தினால் மிகவும் கஸ்டங்களை எதிர்நோக்கிய பகுதி என்ற காரணத்தினாலேயே இந்த உதவிகள் வருகின்றன.அனைத்து மக்களுக்கும் சிறந்த நாடாக இதனை கட்டியெழுப்பவேண்டும் என்ற நோக்கத்துடனேயே அர்ப்பணிப்புடன் இந்த அரசாங்கம் செயற்பட்டுவருகின்றது.எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டினை கட்டி வழங்கவேண்டும்.எதிர்கால சந்ததியினர் சந்தோசமாக வாழும் நிலையினை நாங்கள் ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.உலகில் எந்தவொரு நாட்டுக்கும் இரண்டாம் தர நாடாக மாறாதவண்ணம் இந்த நாட்டினை கட்டியெழுப்பவேண்டும்.
இந்த நாட்டினை கட்டியெழுப்பும்போது நாங்கள் பல விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களுக்கு பெருமையான கலைகலாசாரம் உள்ளது.அவர்களுக்கும் பெரிய சரித்திரம் வரலாறு உள்ளது.அதேபோன்று இங்கு வாழும் தமிழ் மக்களுக்கும் பெருமையான கலைகலாசாரம்,வரலாறு உள்ளது.அதேபோன்று இங்குவாழும் இஸ்;லாமிய மக்களுக்கும் அது உள்ளது.இவர்கள் அனைவரும் இந்த நாட்டின் இலங்கையர்கள்.அனைவரையும் ஒன்றிணைத்து அரசியல் தீர்வினை முன்னெடுக்கவேண்டிய நிலையுள்ளது.
புத்தகங்களில் இருக்கும் சட்டதிட்டங்களை விட சமூகத்தில் உள்ள அவரவர் கலாசார விழுமிங்கள் சட்டதிட்டங்களை நாங்கள் மதிக்கவேண்டும்.நாங்கள் இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களின் அடையாளங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.அதேபோன்று இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் அடையாளங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.அனைவரும் பயம்,சந்தேகம் கொண்டும் வாழும் நிலையை இல்லாமல்செய்யவேண்டும்.
நாங்கள் எப்போதும் இனவாதிகளாக கடும்போக்காளர்களாக இருக்ககூடாது.இந்த நாட்டில் சமாதானத்தினையுமு; நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றவேண்டும்.
இந்த நாடு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் அடையும்போது அனைத்து இனமக்களும் ஒன்றிணைந்தே அவற்றினை பெற்றார்கள்.அதன் பின்னர் இந்த நாட்டில் உள்ள மக்களின் முக்கியத்துவம் புரியாத காரணத்தினாலேயே பல அழிவுகள் ஏற்பட்;டது.எமது நாட்டுக்காக நமது கடமைகளையும்பொறுப்புகளையும் சரியாக செய்யவேண்டும்.
இன,மத.பேதங்களைக்கொண்டு யாரும் மக்களை பிரிக்க முனையக்கூடாது.அவ்வாறு பிரிக்க முனையும்போது மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படும் நிலையேற்படலாம்.