முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் டிசம்பர் 16ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்துவதாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாதது சிங்கப்பூருக்குள் நுழையலாம். கம்போடியா, பிஜி, மாலைத்தீவு, துருக்கி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு
இது டிசம்பர் 16 முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.