பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் நெருக்கடி வேண்டாம் – விதுர விக்கிரமநாயக்க

290 0

ஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன சகல உறுப்பினர்களையும் ஒன்றாக இணைத்துக் கொண்டு நாட்டுக்காகவும் பொதுமக்களுக்காகவும் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் பலவந்தமாக அரசியல் நெருக்கடியை உருவாக்காமல் இருப்பதை ஸ்ரீ லங்காக பொதுஜன பெரமுன உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்கள் ஒருவரையொருவர் வெளிப்படையாக விமர் சிப்பதன் மூலம் நாடு தோல்வியை நோக்கித் தான் முன்னோக்கிச் செல்லும் என்றும் நாங்கள் பொருளாதாரத்தில் உண்மையாகப் பாதிக்கப் பட்டுள்ளோம் என்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தின் ஊடாகவும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண் டால் நாட்டின் நிலைமை என்னவாகும்? மக்களுக்கும் என்ன நடக்கும்?

தீர்வுகளை அந்த நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எவரையும் பணியிலிருந்து நீக்காது அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம் வெற்றியைக் காணலாம் என்றும் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டால் தான் பலம் அதிகரிக்கும் என்றும் கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.