இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை இல்லாமல் செய்யும் நடவடிக்கையே ஒருநாடு ஒருசட்டம். இது நாட்டை மோசமான அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும் என எம் வேலுகுமார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவினத்தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி புரட்சிகமான மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக தெரிவித்து இரசாயன உரத்தை ஒரே இரவில் வர்த்தமானி வெளியிட்டு தடைசெய்தார். பின்னர் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை உணர்ந்து அந்த வர்த்தமானி அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டார்.