நவம்பர் 27

1369 0

மனித இனத்தின் நாகரிகத்தின் அடையாளம் மொழி. பண்பாட்டின் அடையாளம் தாய்மொழி. தாயிடம் இருந்து கற்கும் மொழி தாய்மொழி. தாயாக நம்மைக் காக்கும் மொழி தாய்மொழி. அந்த தாய் மொழி எமது தமிழ் மொழி .. அந்த மொழியை அழிக்க காலங்காலமாக அன்னியபடைகள் முனைந்த போது எம் பாட்டன் மூப்பாட்டன் வாளும் வேலும் பிடித்துப் போரிட்டு எம் தமிழ் மொழியை பாதுகாத்தனர்.

காலத்துக்கு காலம் அன்னிய ஆகக்கிரமிப்புக்கள் வெவ்வேறு வடிவில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முனைகின்றன

ஈழத்தீவில் தமிழ் இனம் பௌத்த பேரினவாத அரசாங்கத்தால் இனப்படுகொலைக்கு உள்ளாகும் வேளை எம் வீரப்பரம்பரை மீண்டும் வீறுகொண்டு எழுந்தது .தம்பி பிரபாகரன் தானை தளபதியானான் . தமிழ் இளையோரின் அண்ணணானான்.

அண்ணன் தலைமையி ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்க தயாரானது.

சிறிலங்கா இராணுவ சுற்றிவளைப்பில் காயமடைந்த சங்கர் சிகிச்சைக்காகத் தமிழகம் கொண்டுசெல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி எம் தலைவரின் உன்னதமான மடியிலே கார்த்திகை 27 ஆம் நாள் மாலை 06.05 மணிக்கு
வீரச்சாவை தழுவிக்கொள்கின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதல்மாவீரரான லெப். சங்கர் மரணித்த நாளே தமிழீழ மாவீரர் நாளாக பிரகடனம் செய்யபட்டதுடன் இன்று வரை கடைப்பிடிக்கப்படுகின்றது.

உவக வல்லாதிக்கசக்திகள் ஒன்று கூடி தமிழீழ தேசம் மலரகூடாது என தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்தார்கள்

தமிழ் மக்களின் மனங்களில் அழியாச்சுடராக ஒளி வீசிக்கொண்டிருக்கும் மாவீரச்செலவங்களை நினைவு கூறும் அந்த நாளை பௌத்த பேரினவாத அரசhங்கம் இல்லாததொழிக்க பல்வேறு வகைகளில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.

நேரடியாக சிறிலங்கா படைகள் ஊடக மக்கள் மிரட்டுவதும் திட்டமிட்டு மாவீரர் வாரத்தில் கேளிக்கை களியாட்ட விழாக்களை நடத்துவதற்கு கைகூலிகளை ஏவி வஞ்சனை செயலும் நடை பெறுகின்றது.

அதே வேளை கத்தோலிக்க பாதிரிமார் சிலரை பக டை க்காய்களாக நகர்த்திய திட்டமும் நடை பெற்றது. தமிழ் மக்களின் ஏகோபித்த எதிர்பினால் திட்டம் முறியடிக்கப்பட்டது.

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.
அணைகள் இட்டு யார் தடுத்தலும் அலைகள் ஒய்வதில்லை”

அதே போல் எந்த தடைகள் வந்தாலும் எம் இனத்திற்காய் உயிரை அர்பணித்த மாவீரர்களை கார்த்திகை 27 இல் விளக்கேற்றி அஞ்சலிப்போம்.