தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டை நேசிக்கும் இளம் தலைமுறையினர், எதைப்பற்றியும் சிந்திக்க முடியாமல், ஆதரவற்ற நிலையில் இருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர், இளைஞர்களின் அமைதியின்மை தொடர்பில் ஆணைக்குழு அறிக்கையில் பல பரிந்துரைகள் இருந்த போதிலும் அதில் பல பரிந்துரைகள் இன்று மீறப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.அறிவு, உண்மை, அறிவியல் மற்றும் தரவுகளின் அடிப்படையிலான யதார்த்தமான தீர்வுகள் நாட்டுக்குத் தேவை என்றும் பாரம்பரியம், நவீனம் என்பவற்றிலிருந்து விலகி, அரசியலுக்குப் பதிலாக நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
நாட்டுக்கு நன்மதிப்பை கொண்டு வருவதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை எனவும் அதற்காக, எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத பல செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சியினரின் ஒரேயொரு போராட்டமே, அரசாங்கத்தின் உரம் தொடர்பான தீர்மானத்தில் முன்வைத்த காலை பின்வைக்க வைத்துள்ளது என்றால், 300 போராட்டங்களை நடத்தினால் அரசாங்கம் முழுமையாக பின்னடைவை சந்தித்து விடும் என்றார்.