கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.
கனடாவில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டம் டொரொண்டோவில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
எம். ஏ. சுமந்திரன் கூட்டத்தில் உரையாற்றும்போது அங்கிருந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒத்த கொடிகளைச் சுமந்தவாறு உள்ளே பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு அரசியல் தீர்வுத் தேவை இல்லை என்றும் தனித் தமிழீழமே தீர்வாக அமைய வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
சுமந்திரன் சிங்கள மக்களுக்கு ஆதரவாளராகச் செயற்படுவதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஏற்கனவே, சுமந்திரன் வெளிநாடுகளில் கலந்து கொண்ட பல நிகழ்வுகளில் இவ்வாறான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.