இந்தியாவிடம் அவசரக் கடன் பெற தீர்மானம்

248 0
எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரை அவசரக் கடனாகப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பில், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஏற்கெனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதுடன், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான டொலர்கள் போதாமையால், கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்து.

மசகு எண்ணெய் இறக்குமதிக்கான டொலர் பற்றாக்குறை காரணமாக
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கடந்த வாரம் மூடப்பட்டதுடன், அதனை மீண்டும் திறக்கும் திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு மாதாந்தம் 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்திருந்ததுடன், பணத்தைக் கண்டுபிடிப்பது கடும் நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.