வீரக்கெட்டிய – கெக்குணயாயபொல பகுதியில் ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு சம்பவத்தில் 36 வயதான ஒருவரே மரணித்தார்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.
வலஸ்முல்ல நீதிவானினால் நீதிவான் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளதோடு சரீரம் மரண பரிசோதனைகளுக்காகத் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.