நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பின்பற்றப்பட வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல் வௌியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் இந்தச் சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவர் ஒருவர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மாணவர் ஒருவருக்கு கொவிட் தொற்று இருக்கலாம் என சந்தேகித்தாலோ பாடசாலைகள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் குறித்த சுகாதார வழிகாட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.