சுன்னாகம் – அம்பனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது நேற்று வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உறவுப்பகை காரணமாகவே வாள்வெட்டு நடந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தரே காயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வாள்வெட்டு நடத்தியவர் தலைமறைவாகியுள்ளார் என்றும், விசாரணை தொடர்கின்றது என்றும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.