சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களுடன், சந்தேகநபர்கள் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்யாணி வீதியில் நேற்று (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 290,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் மற்றும் சிற்றுந்து ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருவளை மற்றும் கல்கிஸ்ஸை பிரதேசங்களில் வசிக்கும் 44 மற்றும் 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி ஐந்து இலட்சத்திற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்