மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

214 0

நுவரெலியா மாவட்டம், காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் பொகவந்தலாவ டின்சின் கெசல்கமுவ ஓயாவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்களைக் பொகவந்தலாவைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொகவந்தலாவை டின்சின், பொகவந்தலாவை தோட்டம், பொகவந்தலாவை கெம்பியன் ஆகிய தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவைப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.