அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களில் இவ்வாறு பல முக்கிய வெளிநாட்டு ராஜதந்திரிகள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.
ஏற்கனவே சீன வெளிவிவகார அமச்சர் வெங் யீ சிறீலங்கா விஜயம் செய்து, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதேவேளை, கனடா, ரஸ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களும் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து ஆராயும் நோக்கில் அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வால் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 12ம் திகதி சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர். கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டேப்போன் டியோன், ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சர்கீ லொச் உள்ளிட்ட முக்கிய ராஜதந்திரிகள் சிறீலங்கா விஜயம் செய்ய உள்ளனர்.