பிரபல சிங்கள மொழிப் பாடகர் தீபால் டி சில்வா, இன்று காலமானார்.
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 50 ஆகும்.