பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஐந்தாம் நாள் இன்றாகும்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
குழு நிலை விவாதம் 23ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 10ஆம் திகதி வரை 16 நாட்கள் நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.