12 நாட்களில் 1200 பேருக்கு டெங்கு – சுகாதார அமைச்சகம்

284 0

623008011ddENGUஇலங்கையில் இந்த ஆண்டின் முதல் பன்னிரெண்டு நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் 1200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதியான கம்பஹா ஆகிய பகுதிகளிலேயே அதிக அளவிலான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ பிரிவின் சிறப்பு நிபுணர் மருத்துவர் பிரசீலா சமரவீர தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்பட்டதாக தெரிவித்த அவர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான 85 பேர் 2016 உயிரிழந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர் பிரசீலா சமரவீர, இந்த ஆண்டு இதுவரை இருவர் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார்.

கொசுக்கள் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றை சுகாதார அமைச்சம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இதனிடையே AH1 N1 வைரஸ் பாதிப்புக்குள்ளான ஐந்து பேர் கண்டி மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான 3 பேர் கண்டி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறந்ததையடுத்து, அவர்கள் சிகிச்சை பெற்றுவந்த பிரிவு மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.