நுவரெலியாவில் பல பாதைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன(காணொளி)

365 0

hatiநுவரெலியா ஹட்டன் ரொத்தஸ் கடைதொகுதியில் இருந்து பழைய கொழும்பு பாதை வரையிலான படிகட்டுப் பாதை மற்றும், ரொத்தஸ் பிரிவு இரண்டில் அமைக்கப்பட்ட கோவில் படிக்கட்டுப் பாதை என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரங்கள் அமைச்சின் வழிகாட்டிலில், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் குறித்த படிக்கட்டுப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த படிக்கட்டுப் பாதை திறக்கும் நிகழ்விற்கு மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணன் ராஜாராம் தலைமை தாங்கினார்.

இதன்போது நிகழ்வில் உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் இராதாகிருஸ்ணண் ராஜாராம், மலையகத்தில் பெருந்தோட்டங்கள் யாவற்றையும் கிராமங்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.