தைத்திருநாளை முன்னிட்டு மலையகத்தில் வர்த்தக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.
தைத்திருநாளுக்கு தேவையான பூஜை பொருட்கள், புத்தாடைகள், அத்தயாவசியப்பொருட்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை தைத்திருநாளை முன்னிட்டு பொலிஸார் விசேட கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.