வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான வீடுகளை அமைக்கும் வேலைகள் இராணுவத்திடம் (காணொளி)

370 0

veedugalயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கான 33 வீடுகளை அமைக்கும் வேலைகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

வலி.வடக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணியில் வீடுகள் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் இடம்பெயர்ந்த காணியற்ற மக்களுக்காக 100 வீடுகள் அமைக்கப்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் கடந்த நவம்பர் மாதம் 31ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டன.

வீடுகள் வழங்கப்படாது முகாமில் தங்கியுள்ள 33 மக்களுக்கான வீடுகள் அமைக்கும் பணியினை தற்போது இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.