வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் மரதன் ஓட்டப் போட்டி இன்று நடைபெற்றது(காணொளி)

343 0

marathanவவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டியின் முதல் நிகழ்வாக ஆண் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டம் இன்று காலை கல்லூரி அதிபர் ரீ.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் நிகழ்வினை பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளரும் ஆசிரியருமான கே.நிரஞ்சன் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் முன்னாள் பொருளாளருமான எஸ்.தவச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

கல்லூரியின் ஆண்களுக்கான மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களான கே.நிசாந்தன், கே.நிசோபன் மற்றும் இ.கிரிதரன் ஆகியோருக்கான வெற்றி கேடயங்களை கல்லூரியின் அதிபர் ரீ.பூலோகசிங்கம் வழங்கிவைத்தார்.

பெண்களுக்கான மரதன் ஓட்டத்தில் வெற்றிபெற்றவர்களான எஸ்.தினோதியா, சா.சானுஜா மற்றும் எஸ்.சரணியா ஆகியோருக்கான வெற்றி கேடயத்தை கல்லூரியின் பிரதி அதிபர் திருமதி. பி.உதயசேகரம் வழங்கி வைத்தார்.

இதேவேளை ஆண்கள் பிரிவில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.