கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தைப்பொங்கல் நிகழ்வுகளில் கடந்த காலங்களை விட இவ்வருடம் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயிகளின் வாழ்வாதார தொழிலான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் நடைபெறவுள்ள தைப்பொங்கலுக்கு கடந்த காலங்களை விட மக்கள் ஆர்வம் காட்டுவது குறைவாக காணப்படுகின்றது.
நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாக காணப்;படுவதுடன் பொங்கல் பொருட்களை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம் காட்டுவது குறைவாக உள்ளதை காணமுடிகிறது.