சண்டையை தடுக்க முயன்றவர் தலையில் அடிபட்டு மரணம்

165 0

வவுனியா போகஸ்வெவ பகுதியில் இருதரப்பினருக்கிடையில் இடம்பெற்ற அடிதடியினை வழிமறிக்கச்சென்ற நபர் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்று (14) மாலை இருதரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்ப்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறியுள்ளது.

அதனை தடுக்கச்சென்ற 29 வயதான நபர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

சம்பவம் தொடர்பாக போகஸ்வெவ காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்