18 மாதங்களில் தங்கள் வசமிருந்த கால் பகுதி இடங்களை இழந்துள்ளது ஐ.எஸ் அமைப்பு

454 0

201607102150305485_Islamic-State-lost-quarter-of-its-Iraq-Syria-territory-in-18_SECVPFஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஐ.எஸ் எனப்படும் இஸ்லாமிய தேச அமைப்பானது ஆக்கிரமித்து தனி நாடாக அறிவித்து செயல்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து ஐ.எஸ் பிடியில் இருந்த தங்கள் நாட்டு பகுதிகளை மீட்க ஈராக் மற்றும் சிரியா அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை அந்த நாடுகளுக்கு உதவி வந்தது. மேலும் ரஷ்யா தலைமையிலான படையின் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

இதனிடயே கடந்த சில மாதங்களாக ஐ.எஸ் அமைப்பினரிடம் இருந்து தங்களது பகுதிகளை மீட்க இருநாட்டு இராணுவ படைகள் தீவிர சண்டையில் ஈடுபட்டு வந்தன. அதில் பலூடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஈராக், சிரியாவில் தங்கள் வசமிருந்த கால் பகுதி இடங்களை கடந்த 18 மாதங்களில் ஐ.எஸ் எனப்படும் தீவிரவாத அமைப்பு இழந்துள்ளதாக அமெரிக்காவின் ஐ.ஹெச்.எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ் பிடியில் சுமார் 90,800 ச.கிமீ பரப்பளவாக இருந்தது, தற்போது 68,300 ச.கிமீ ஆக சுருங்கியுள்ளது. சிரிய இராணுவம்  தற்போது அந்நாட்டின் மிகப்பெரிய நகரமான மோசூலை கைப்பற்றும் முனைப்பில் சண்டையிட்டு வருகிறது.