கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது

261 0

20892954992காணிகளை கொள்ளையடிப்பதன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் பெறப்பட்ட கடன்களை செலுத்துவதற்காக காணிகளை குத்தகைக்கு விடுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது.

இதன்காரணமாக நாட்டில் பிழையான கருத்து வாதத்தை அரசாங்கம் கட்டியெழுப்பியுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குற்றம்சுமத்தியுள்ளார்.

அவ்வாறு காணிகளை குத்தகை விடுவதன் ஊடாக ஒரு வருடத்திற்கான கடன் தவணைப் பணத்தை மாத்திரமே செலுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை அபிவிருத்தி சபை மற்றும் அபிவிருத்திக்கான முகவர் நிறுவனம் என்ற பெயரில் சட்டவிரோத மற்றும் முறையற்ற அரசியலமைப்புக்கு ஒவ்வாத இரண்டு நிறுவனங்களை ஸ்தாபித்துள்ளது.

அதனூடாக நாட்டின் வளங்களை அபாயகரமாக முறையில் விற்பனை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.