யாழ் மாணவர்களின் உயிரிழப்பு சம்பவம்; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

300 0

1266445158Courtபல்கலைக்கழக மாணவர்களின் உயிரிழப்பு சம்பவ வழக்கினை வேறு திசைக்கு நகர்த்த முயற்சிக்கின்றீர்களா என யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி குற்ப்புலனாய்வாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு அறிக்கையை குற்றப் புலனாய்வாளர்கள் இன்னும் நீதிமன்றில் சமர்பிக்கவில்லை. இதனால் நீதிபதி கடும்தொணியில் எச்சரிக்கை விடுத்தார்.

இவ்வழக்கு நடவடிக்கையை வேறு திசைக்கு நகர்த்துவதற்கு முயற்சிக்கின்றீர்களா எனவும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளை நீதிபதி கடுமையான தொணியில் வினவியிருந்தார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடம் முல்லைதீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரனை தொடர்பில், மறு வழக்கு தவணையின் போது முல்லைத்தீவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அவ்வாறில்லையாயின் அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யும் எனவும் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் தெரிவித்தார். வழக்கில் சந்தேகநபர்களாக கைது செய்யப்பட்டுள்ள 05 பொலிஸாரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.