விதிகளைத் தளர்த்தியதால் அமெரிக்க ராணுவத்தில் சேர சீக்கியர்கள் ஆர்வம்

278 0

201701121346140866_More-Sikhs-now-planning-to-join-US-Army-after-new-rule_SECVPFஅமெரிக்க ராணுவத்தில் தலைப்பாகை, ஹிஜாப், தாடி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ராணுவத்தில் ஏராளமான சீக்கிய, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மத அடையாளங்களை சுதந்திரமாக பின்பற்ற அந்நாட்டு ராணுவம் சமீபத்தில் அனுமதியளித்துள்ளது.

இதற்கு முன்னதாக செயலர் நிலையிலான அதிகாரிகளுக்கு மட்டும் மத அடையாளங்களை பின்பற்ற அனுமதி அளித்த நிலையில், தற்போது கீழ் நிலை வீரர்களுக்கும் அனுமதியளித்து அமெரிக்க ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க இராணுவத்தின் இந்த அறிவிப்பால் ஏராளமான சீக்கியர்கள் ராணுவத்தில் சேர திட்டமிட்டுள்ளதாக குரு கோபிந்த் சிங் அறக்கட்டளையின் செயலாளர் ராஜ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ”சீக்கியர்களைப் பொறுத்தவரை அமெரிக்காவில் இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். சரியான தருணத்தில் அமெரிக்க அரசு தனது கொள்கைகளை மாற்றியமைத்துள்ளது. இதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் ராணுவ செயலாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அறிவிப்பால் சீக்கிய இளைஞர்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.