திருகோணமலை, உப்புவெளி காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று (13) உத்தரவிட்டார்.
சுமேதகம, கண்டி வீதி, திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக உப்புவெளி போதைப் பொருள் குற்றத் தடுப்பு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்ததாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை காவற்துறையினர் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் (வாசஸ்தலம்) முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.