ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் தாக்குதல்

281 0

201701131110179817_Syria-says-Israeli-strikes-hit-near-airport-west-of-capital_SECVPFடமாஸ்கஸ் நகரில் ராணுவ விமான நிலையம் அருகே ராக்கெட்டுகளை ஏவி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகே விழுந்து வெடித்ததாக சிரியா அரசின் செய்தி நிறுவனமான ‘சனா’ தெரிவித்துள்ளது.

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் இவ்வாறு அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிரியா அரசு இந்த கண்மூடித்தனமான தாக்குதலை பொருட்படுத்தாமல் கிளர்ச்சி குழுக்களுக்கு எதிரான எங்களது நடவடிக்கை தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் மெஸ்ஸே ராணுவ விமான நிலையம் அருகேயுள்ள சில பகுதிகள் தீப்பற்றி எரியும் காட்சிகளை சிரியா ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.