சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரிக்கு வரும் நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராமங்களில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தினர்.இந்த நிலையில் இன்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி சுசீந்திரம் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க குமரி மாவட்டம் வருகிறார்.
அவருக்கு மீனவ மக்களின் எதிர்பை தெரிவிக்க இன்று குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவிக்க இனயம் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்தது.அதன்படி இன்று குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
மேலும் இனயம் கடற்கரை கிராமத்தில் இன்று ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதற்கு போராட்ட குழு தலைவர் டல்லஸ் தலைமை தாங்கினார். இனயம் பங்கு தந்தை அன்பரசன், இனயம் புத்தன்துறை பங்கு தந்தை சேல்ஸ், சட்ட ஆலோசகர் ஸ்டேன்லி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு இனயம் துறைமுகம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.