வடமேல் மாகாணத்தில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று

271 0

hivவடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.

குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச் சென்று மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கே எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், இதன் காரணமாக வடமேல் மாகாணம் எச்.ஐ.வி தொற்றில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தொற்று நோய்ப் பிரிவு கூறியுள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவ வசதிகளும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.