வறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- அஜித் பி பெரேரா

303 0

ajith-p-pereraவறட்சி காரணமாக மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

மின்சார நெருக்கடிக்கு முகம்கொடுப்பதற்கு தனியார் துறையினரிடம் இருந்த 60 மெகா வோல்ட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளதாகவும்;, எக்காரணம் கொண்டும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 35 விதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் அஜித் பி பெரேரா, இதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்பட்ட மாட்டாது எனவும் தெரிவித்தார்.

இதற்காக 3 தனியார் துறை நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து மின்சாரத்தினை பெற்றுக்கொள்ள, அவற்றுடனான ஒப்பந்தத்தை இன்னும் 6 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.