ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்- ரணில்

247 0

download (4)ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்கள் உரிமை உள்ளிட்ட விடயங்களைப் பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலமே, இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை, வழங்க ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்துள்ளது குறித்து பிரதமர் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், மனித உரிமைகள் பாதுகாப்பு, ஜனநாயகத்தை மீள்நிலைப்படுத்தல் ஆகியவற்றில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றியதால் தான், ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைப்பது சாத்தியமாகியதாக குறிப்பிட்டுள்ளார்.

இது நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றி மாத்திரமல்ல, நாட்டுக்கே கிடைத்துள்ள வெற்றி எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைத்துள்ளதன் மூலம், இலங்கையின் ஆடை உற்பத்திகளும், ஏனைய உற்பத்திகளும், ஐரோப்பிய சந்தைக்குள் நுழைய முடியும் எனவும் இதனால் வேலை வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும், பிரதமர் தெரிவித்துள்ளார்.