ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெற்றியாகும்- ஜனாதிபதி செயலகம்

265 0

pracidentஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.