நல்லிணக்க செயலணியினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் தமிழர்களுக்கான உரிமைகள் குறித்த விடயங்கள் தெளிவூட்டப்பட்டுள்ள போதிலும், அந்த அறிக்கையில் சிங்கள மக்கள் தொடர்பில் எந்தவித விடயங்களும் தெளிவூட்டப்படவில்லை என ஜாதிக்க ஹெல உறுமயவின் பிரதம செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, தமிழர்களுக்கு அனைத்து விதத்திலும் பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மக்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரம், இதுவரை தெற்கிலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் பகுதியில் தமிழர்கள் குடியேறுகின்ற போதிலும், வடக்கு பகுதியில் சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதற்கான உரிமைகள் குறித்து இந்த நல்லிணக்க அறிக்கையில் ஒரு வசனமேனும் சுட்டிக்காட்டப்படவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்;.
அத்துடன், புத்த சமயம் இதுவரை நாட்டின் அரச சமயமாக பிரகடனப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்;.
நல்லிணக்க செயலணியின் அறிக்கையின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.